பாஜக அரசுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சரத்பவார்: கூட்டத்தை புறக்கணித்த திமுக...

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

பாஜக அரசுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சரத்பவார்:  கூட்டத்தை புறக்கணித்த திமுக...

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டுக்குள் மத்திய அரசுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசனை நடத்த அக்கட்சி தலைவர் சரத்பவார் திட்டமிட்டிருந்தார்.  பாஜக காங்கிரஸ் அல்லாத 3 வது அணியை கட்ட சரத்பவார் முயற்சித்து வருகிறார்.

இந்தநிலையில் டெல்லி  ஜென்பத் சாலை இல்லத்தில்  சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  வருகிறது. இதில்  பல்வேறு கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் விமர்சகர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக திமுக  மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா இந்த ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அழைப்பு இல்லாததால், எதிர்கட்சிகளின்  கூட்டத்தை  திமுக புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதனிடையே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த கேராளவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினோய் விஸ்வம், தோல்வியடைந்த, மக்கள் வெறுக்கும் பாஜக அரசுக்கு எதிரான ஒரு பொதுத்தளமாக இந்தக் கூட்டணி அமையும் எனக் குறிப்பிட்டார். மேலும் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார்.