இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்... கூகுள் காட்டிய பதிலால் காண்டான கன்னட நெட்டிசன்கள்

இந்தியாவின் அசிங்கமான மொழியாக கன்னடத்தை காட்டிய கூகுளை கன்னட மக்கள் வருதெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்... கூகுள் காட்டிய பதிலால் காண்டான கன்னட நெட்டிசன்கள்

 2018-ம் ஆண்டில் கூகுளில் இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் படங்களை காட்டியது. அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விளக்கம் அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதோபோன்றதொரு நெருக்கடியான சூழலை கூகுள் தற்போதும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியாவின் அசிங்கமான மொழி எது? என்று கூகுளில் தேடும் போது கூகுள் கன்னடம் என்று பதிலைக் காட்டியுள்ளது. அதனால், ட்விட்டரில் கன்னடர்கள் கொதித்துள்ளனர். கூகுள் எப்படி எங்கள் மொழியை அசிங்கமான மொழி என்று வகைப்படுத்தலாம் என்று கண்டனங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும் என்று கன்னட நெட்டீசன்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதேநேரத்தில், உலக மொழிகளின் ராணி என்ற கேள்விக்கும் கன்னடாவைக் கூகுள் காண்பித்துள்ளது. தற்போது, மேற்கூறிய தவறை கூகுள் நிறுவனம் திருத்தியுள்ளது.

இந்திய நிலப்பரப்பில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் அசிங்கமான மொழி என்று கூகுளில் தேடும் போது கன்னட மொழி என வருகிறது.இதனால் கன்னட நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கூகுளை கண்டித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.