ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகள்...ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

புதினின் அறிவிப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியது.

ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகள்...ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 6 மாதங்கள் கடந்த நிலையில், நேற்று உக்ரைனிலிருந்து 50 சதவீதம் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

புதின் எச்சரிக்கை

மேலும் உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் எல்லை மீறிவிட்டதாக எச்சரித்த அவர், ரஷ்யாவை துண்டாக்கவோ, அழிக்கவோ முயற்சித்தால் அனைத்து வழிகளையும் கையில் எடுப்பேன் எனவும் பகிரங்கமாக எச்சரித்தார். இதனை விளையாட்டுக்கு சொல்லவில்லை என அவர் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, ரஷ்யா வரும் நாட்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை

இந்த நிலையில் புதினின் அறிவிப்பை தொடர்ந்து திடீர் ஆலோசனை கூட்டம் நடத்திய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கவும் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.இதனிடையே ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கொடூர தாக்குதல் நடத்தி நாட்டை ஆக்ரமிக்க முயன் ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ரஷ்யா தனது பங்குகளில் இருந்து  இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.