"மகளிர் இடஒதுக்கீடு - இந்தியாவின் புதிய வரலாறு" பிரதமர் மோடி பெருமிதம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவில் புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லி பாஜக தலைமையகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்விடம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையும் படிக்க : சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிய அனைத்து எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். இடஒதுக்கீட்டில் அதிருப்தி அடையும் அளவுக்கு சில அரசியல்கட்சிகள் செயல்பட்டதாகவும், பல தடைகள் இருந்தபோதும் வெளிப்படையான முயற்சிகளால் இடர்பாடுகளை உடைத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவில் புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.