கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்- பொதுமக்கள் அச்சம்

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை  வெளியேற்ற வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்- பொதுமக்கள் அச்சம்

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்னா தாலுகா அருகே பெரியனஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுயானைகள், அந்த கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாகவே இந்த இரண்டு யானைகளும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும்  விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், அட்டகாசம் செய்துவரும் நிலையில் வனத்துறையினர் எந்தவொறு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என கிராமமக்கள் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில் பொதுமக்களை அச்சுறுத்தி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை உடனடியாக கிராமத்தில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.