அமீரகத்தில் களைகட்டும் ரமலான் கொண்டாட்டங்கள்..! மின் விளக்குகளில் ஜொலிக்கும் குளோபல் வில்லேஜ் !!

அமீரகத்தில் களைகட்டும் ரமலான் கொண்டாட்டங்கள்..! மின் விளக்குகளில் ஜொலிக்கும் குளோபல் வில்லேஜ் !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ரமலானை முன்னிட்டு , குளோபல் வில்லேஜ் அரங்கில் மின்னும் விளக்குகள், பிறை அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள துபாயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர்  ரமலானை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற அற்புதமான இடத்தை தாம் பார்த்தது இல்லை என ஒரு எகிப்து சுற்றுலாபயணி தெரிவித்துள்ளார். இந்த அரங்கில் கிதார் இசை ,அரபிய இசை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது