உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை அனுப்பி வைப்போம்...இந்தியா...!!

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில், உக்ரைனுக்கு மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை அனுப்பி வைப்போம்...இந்தியா...!!

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அரிந்தம் பாக்சி கடந்த திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், "உக்ரைனுக்கு மருந்துகள் உட்பட மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும். இருப்பினும், மேலும் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." என்று கூறினார்.


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து பேசிய அரிந்தம் பாக்சி, தேவைக்கேற்ப புதிய விமானங்கள் சேர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் பேசிய அவர், “சிலர் நடக்கும் நிகழ்வுகளால் பீதி அடைகிறார்கள். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் உக்ரேனிய எல்லையைத் தாண்டியவுடன், இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் எடுத்தாலும் உங்களைத் திரும்பக் கொண்டுவர போதுமான விமானங்கள் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.


ஸ்லோவாக்கியா, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளின் எல்லைப் புள்ளிகளில் தேவையான ஏற்பாடுகளுக்காக இந்திய வெளியுறவு அமைச்சக குழுக்களின் இருப்பை, இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதவி அணிகளின் தொடர்பு விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சக குழுக்களின் அளவை நாங்கள் அதிகரித்து வருகிறோம். உக்ரைன் எல்லையின் நாடுகளில் உள்ள எங்கள் தூதரகங்களின் பலத்தையும் நாங்கள் பெருக்கி வருகிறோம். ஒவ்வொரு நாளும் அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் டெல்லியிலிருந்தும் அதிக அதிகாரிகளை நாங்கள் அங்கீகரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.


அங்கு இருக்கும் இந்தியர்கள், உக்ரைனின் மேற்குப் பகுதிக்குச் சென்று, கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்ள முயற்சியுங்கள். எல்லைகள் மிகவும் கூட்டமாக இருப்பதால், இருப்பிடத் தகவலைப் பகிரவும், இதனால் அவர்கள் பதிவுசெய்து, அவர்களை எப்போது வெளியே கொண்டு வர முடியும் என்பதை பார்க்க முடியும்" என்று கூறி மக்களுக்கு தைரியம் அளித்தார்.


விமானக் கட்டணத்திற்கு மாணவர்கள் அதிக விலை கொடுக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யாரும் எதுவும் செலுத்தவில்லை, அனைத்தும் இந்திய அரசாங்கத்திடம் ஏற்றுக்கொண்டது என்று உறுதியளித்தார்.


ரொமேனியா மற்றும் மால்டோவாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மேற்பார்வையிடுவார் என்றும், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு (Rijuju) ஸ்லோவாக்கியாவுக்குச் செல்வார் என்றும் பாக்சி தெளிவுப்படுத்தினார்.


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற தேவையான புதிய விமானங்களும் சேர்க்கப்படும் என்று மையம் உறுதியளித்துள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஹங்கேரியில் செயல்பாடுகளைக் கவனிப்பார், என்றும், சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற இணை அமைச்சர் VK சிங் போலந்தில் வெளியேற்றங்களை நிர்வகிப்பார் என தகவல்கள் வெளியிட்டார்.


ஆப்கானிஸ்தான் நெருக்கடியின் போது சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமானப்படை பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாக்சி, விமானப்படை தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். தற்போது வர்த்தக விமானங்கள் மட்டுமே இயங்கி வருவதாக அவர் கூறினார்.


வழங்கப்பட்ட ஹெல்ப் லைனில் இந்தியர்கள் பதிலைப் பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த திரு பாக்சி, கட்டுப்பாட்டு அறைகள் விரிவு படுத்தப் பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற பல சேனல்கள் பதிலளிக்கும் திறனை விரிவுபடுத்த செயல்படுவதாகவும் கூறினார். மேலும், இந்தியர்கள் பலர் உக்ரைனின் மேற்குப் பகுதிகளுக்குச் சென்றதையும் பாக்சி உறுதிப்படுத்தினார்..