தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய வைகோ!!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய வைகோ!!

மீன்வளம் மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச விரைவில் இந்தியா-இலங்கை இடையே கூட்டு செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்  தாக்கப்படுவது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வலியுறுத்தியுள்ளார் தற்போது அதன் பேரில்,  56 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ததாகவும் , தற்போது, இலங்கை அரசின் காவலில் இந்திய மீனவர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.