மத்திய பட்ஜெட் 2023- 24: நிதிகளின் விவரம்.....

மத்திய பட்ஜெட் 2023- 24: நிதிகளின் விவரம்.....

மத்திய பட்ஜெட் தாக்கலில் இடம்பெற்றவைகள் 

  • தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவை இறக்குமதி அதிகரிப்பு.
  • திருப்பி செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்.
  • 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை அலையாத்தி காடுகளை பாதுகாக்கும் பணியில்  ஈடுபடுத்தும் திட்டம்.
  • செல்போன் உதிரிபாகங்கள், கேமராக்கள், டிவிக்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.
  • டிஜிட்டல் முதலீடு தொடர்ந்து 3வது ஆண்டாக ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.
  • இந்திய நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • அரசின் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் PAN CARD அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.
  • 5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்.
  • மீன்வளத்துறை வளர்ச்சிக்காக ரூ.6, 000 கோடி.
  • சிறு, குறு நிறுவனங்கள் மேம்பட கடன் உத்தரவாத திட்டத்திற்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு.

மேலும் படிக்க | 5 வது முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் 6 வது நிதியமைச்சர்