வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்...

டெல்லி ஜே.என். பல்கலை கழகம் அருகே வாக்கிங் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்...

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் பிஎச்.டி. படித்து வரும் மாணவி ஒருவர் வளாகத்தின் கிழக்கு வாசல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார்.  திடீரென வளாகத்தின் உள்ளே இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் பேசியுள்ளார்.

இதன்பின்பு அவரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவி சத்தம் போட்டு அலறியது தொடர்ந்து அந்த நபர் பயந்து  அங்கிருந்து தப்பியுள்ளார்.இதையடுத்து தகவல் அறிந்த போலீசா சம்பவ இடத்திற்கு சென்று அந்நபரை தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மாணவி மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது மேலும் அந்த நபர் அவரின் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.  அதிர்ச்சியில் இருந்து மீளாத மாணவி அந்த நபரை சரியாக அடையாளம் காட்டுவேன் என கூறினார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.