அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவலர்....உயிரிழந்த சோகம்!

வழக்கம் போல் நடைபெறும் காலை நேரத்து அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது காவலர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில்  பங்கேற்ற காவலர்....உயிரிழந்த சோகம்!

மராட்டிய  மாநிலமான தனே என்ற மாவட்டத்தில் அதிவிரைவு காவலர் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார் மகேஷ் மோர். இவருக்கு வயதோ 27 என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிவிரைவு படைப்பிரிவில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களும் வழக்கம் போல் அதிகாலை நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர் இதில் கான்ஸ்டபிளான மகேஷும் உள்ளார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருக்கையில் அதில் காவலர் மகேஷ் மட்டும் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட சக காவலர்கள் மகேஷை மீட்டு அருகில் உள்ள தானே சிவில் என்ற மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்து உள்ளனர்.  காவலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அறிந்து கொண்ட சக காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அணிவகுப்பின் போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் பிரேத பரிசோதனையிலேயே காவலரின் உயிரிழபுக்கான காரணம் தெரியவரும் எனவும் மேலும் இது குறித்து போலீசார் தரப்பில் வழக்குபதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.