3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 கிராம் போதை பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியா பெண்..! போலீசாரால் கைது

புதுச்சேரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் போதை பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியாவை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 கிராம் போதை பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியா பெண்..! போலீசாரால் கைது

புதுச்சேரியில் ஆப்ரேஷன் விடியல் என்ற பெயரில் போதை பொருட்கள் புழக்கத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி கடற்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த பெண் உட்பட மூவரை கைது செய்து விசாரித்ததில், அவர்கள் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், போதை பொருட்களை விற்பனை செய்ய முற்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து  32 கிராம் எடை கொண்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.