வேலை கேட்பது போல் நடித்து மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்ற பெண்...கம்பி எண்ணும் அவலம்.!!

புதுச்சேரியில் வேலை கேட்பது போல் சென்று பெண் மீது மிளகாய் தூள் தூவி கழுத்தில் இருந்து தங்க நகையை பறிக்க முயன்ற பெண்னை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

வேலை கேட்பது போல் நடித்து மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்ற பெண்...கம்பி எண்ணும் அவலம்.!!

புதுச்சேரி நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.  இவர் லெனின் வீதி கொசப்பாளையத்தில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார், இந்நிலையில் இவரது அலுவலகத்திற்கு நேற்று காலை பெண் ஒருவர் வந்து தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது விஜயலட்சுமி மையத்தின் உரிமையாளர் வெளியே சென்றிருப்பதாகவும் மாலை வரும் படி கூறியுள்ளார், அதன் படி மாலை வந்த அப்பெண் தகவல் மையம் வாசலில் நின்று கொண்டிருந்த விஜயலட்சுமி முகத்தில் மிளகாய் தூள் தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்,

இதில் சுதாரித்து கொண்ட விஜயலட்சுமி அப்பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார் அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் செயின் பறிப்பில் ஈடுப்பட முயன்ற பெண்னை பிடித்தனர். மேலும் அந்தபகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் வந்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.