தமிழகத்தில் 45,000 செல்போன் கோபுரங்கள் உள்ளன- மத்திய அரசு தகவல் !

தமிழகத்தில் 45,000 செல்போன் கோபுரங்கள் உள்ளன- மத்திய அரசு தகவல் !

இந்தியாவில் 6 லட்சம் செல்போன் கோபுரங்களும், தமிழகத்தில் 45 ஆயிரம் செல்போன் கோபுரங்களும் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகள் முழுமையாக கிடைக்கிறதா என கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொலைதொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை மற்றும் இணைய சேவையை முறையாக வழங்க தேவைக்கு ஏற்ப தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 138 தொலைத்தொடர்பு கோபுரங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 82 ஆயிரத்து 189 தொலைதொடர்பு கோபுரங்களும், மகாராஷ்டிராவில் 73 ஆயிரத்து 435, தமிழகத்தில் 45 ஆயிரத்து 6 கோபுரங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 32 கோபுரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.