ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்டு ஓடிய இளைஞர்...

இளைஞர் ஒருவர் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்டுள்ளார்.ஓட்டுநர் அதனை கவனித்து ரயிலை நிறுத்தியதால் அந்த பெண் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார்.

ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்டு ஓடிய இளைஞர்...

பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரின் மெட்ரோ ரெயில் நிலையத்தில்  ஏராளமானோர் ரெயிலுக்காகக் காத்திருந்தனர். அப்போது ரெயில் நிலைய நடைமேடையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணை, அவர் பின் நின்றிருந்த நபர் ஒருவர் தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிடுகிறார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண் தண்டவாளத்தில்  விழுகிறார்.

அவர் விழுந்த அந்த வேகத்திலேயே அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்க கூடும். எதிர்பார்த்துக் காத்து நின்ற மெட்ரோ ரயில் வரும் வேளையில்  அந்த ரயிலின் அவசரகால பிரேக்குகள்  சிறப்பாக வேலை செய்ததால், அப்பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் ஓட்டுநர் சமயோசிதமாக சிந்தித்து அந்த ரயிலை நிறுத்தியுள்ளார்.

அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, ஓடிய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால், இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.