சிகிச்சை அளிக்க தாமதம்....ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்த வாலிபர் நரம்பு அறுந்து பலி..!....!

புதுச்சேரியில் விபத்தில் சிகிச்சை அளிக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த வாலிபர் மருத்துவமனையின் கண்ணாடியை கையால் உடைத்து நரம்பு துண்டித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிகிச்சை அளிக்க தாமதம்....ஆத்திரத்தில்  கண்ணாடியை உடைத்த வாலிபர் நரம்பு அறுந்து பலி..!....!

புதுச்சேரி திருபுவனை  கலிதீர்த்தாள்குப்பம் ரமணா நகரை சேர்ந்தவர் கேசவன், இவரது மகன் அரசு, இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்தார், இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்,

அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அரசுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவரது நண்பர்கள் அவரை உடனடியாக திருபுவனையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்,


அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் அரசுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு அங்கிருந்த ஆஸ்பத்திரி கண்ணாடியை கையால் குத்தியுள்ளார், இதில் அவருக்கு நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது, ரத்தம் அதிகம் கசிய தொடங்கியதை அடுத்து  அவரது நண்பர்கள் அரசுவை மீட்டு கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்,


பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அரசு உயிரழந்தார், இதுகுறித்து அவரது தந்தை கேசவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.