கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல சாலை சும்மா பளபளன்னு இருக்கணும்... கிளுகிளுப்பாக பேசிய அமைச்சர் !

பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பின் கன்னம்போல் சாலைகள் பளபளன்னு இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா தெரிவித்துள்ளார்.

கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல சாலை சும்மா பளபளன்னு இருக்கணும்... கிளுகிளுப்பாக பேசிய அமைச்சர் !

ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர குடா பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி " என தொகுதியின் சாலைகள் 'கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல , இப்பகுதியில்  அமைக்கப்பட வேண்டும்,' எனக் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக பீஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் பீஹாரில் பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல மிருதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது குறிப்பிடதக்கது.