முஸ்லிம்களின் தொழுகை பலத்தைக் காட்டும் நிகழ்வாக இருக்க கூடாது..

முஸ்லிம்களின் தொழுகையானது பலத்தினைக் காட்டும் விதத்தில் இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் தொழுகை பலத்தைக் காட்டும் நிகழ்வாக இருக்க கூடாது..

பாஜக ஆளும் மாநிலமான ஹரியானவின் முதல்வரான மனோகர் லால் கட்டார் முஸ்லிம்களின் தொழுகையை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் திரந்தவெளி தொழுகையை பற்றி பலர் அவதூறு பரப்பி வந்த நிலையில் முதல்வர் இக்கருத்தை வெளியிட்டதாக கூறிகின்றனர்.

இது குறித்து ஹரியான முதலமைச்சர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது பொது இடங்களில் வழிபாடுகளை மேற்கொள்வது தவறான செயலாகும்,மேலும் நமாஸ் என்பது நமஸாக மட்டுமே இருக்க வேண்டும்.இது தொழுகையின் பலத்தை குறித்து காட்டும் செயலாக மாறி  விடக் கூடாது என தெரிவித்த அவர் பிராத்தனை என்பது அனைவருக்கும் உரிய ஒரு உரிமையாக இருந்து வருகிறது.ஆனால் அதனை குறிப்பிட்ட இடத்தில் தான் செயல்படுத்துதல் சரியானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் மாற்றுக் கருத்து தெரிவித்து வருபவர்கள் முதலில் உள்ளூரில் உள்ள நிர்வாகத்துடன் பேசி அவர்களே தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.பண்டிகைகளுக்கு என நடத்தப்படும் விழாக்களில் சீர்குலைக்க செய்யும் விதத்தில் இருக்கும் சம்பவங்களை அரசு ஒருபோதும் ஏற்று நடக்காது என அவர் பொதுமக்களிடையே தெரிவித்துள்ளார்.