போலி மது பான ஆலையை நடத்தி வந்தோர்களை வளைத்து பிடித்த காவல் அதிகாரிகள் !!

போலி மது பான ஆலையை நடத்தி வந்தோர்களை வளைத்து பிடித்த காவல் அதிகாரிகள் !!

தஞ்சை அருகே போலி மதுபான ஆலை நடத்தி வந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துலுக்கம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்ததோடு, ஆலையை நடத்தி வந்த ஆறு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து  650 மது பாட்டில்கள், 2000 காலி மது பாட்டில்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட  மூலப்பொருட்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.