விமானத்தில் பெண்ணிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் - விமானத்தில் பரபரப்பு!

விமானத்தில் பெண்ணிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் - விமானத்தில் பரபரப்பு!

நியூ ஜெர்ஸியிலிருந்து லண்டன் வந்த விமானத்தில் தன்னை பிரித்தானியர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வந்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவிலிருந்து நியூ ஜெர்ஸி நகரமான Newark-ல் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 40 வயது பெண் ஒருவரை, பிரித்தானியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தாக Heathrow விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஜனவரி 31-ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை நடந்ததாக கூறப்படுகிறது. விமானம் காலை 6.30 மணிக்கு லண்டனில் தரையிறங்கிய நிலையில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை அவர்கள் கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் லண்டன் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஓத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது.