இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீளுவோரின் எண்ணிக்கை 97.22சதவீதமாக உயர்வு...

கொரோனா தொற்றிலிருந்து மீளுவோரின் எண்ணிக்கை 97 புள்ளி 22 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீளுவோரின் எண்ணிக்கை 97.22சதவீதமாக உயர்வு...

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 154 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 லட்ட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று மட்டும் தொற்றுக்கு 724 பேர்  பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பானது 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 39 ஆயிரத்து 649 பேர் தொற்றிலிருந்து மீண்டிருப் பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் தொற்று நீங்கி மருத்துவமனையில் இருந்து  வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4 லட்சத்து 50 ஆயிரத்து 899 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 501 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 லட்சத்து 35 ஆயிரத்து 287 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.