
பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார். அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் பிளிப்கார்ட்டின் லேடீஸ் ஜென்டில்மேன் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா பட்டர்ஜி கூறுகையில்,
சிறு வயதில் நான் கணிதப்பாடப்பிரிவிற்காக டீயூசன் சென்றேன். அங்கு எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மிக சிறந்தவர்,எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.
திடீரென ஒரு வாரம் அவர்கள் இருவரும் வரவில்லை. டியூஷன் வருவதையே நிறுத்திக் கொண்டனர். இதற்கு எனக்கு எந்த காரணமும் தெரியவில்லை. அவர்கள் வராததால் நான் மட்டும் தனியாக டியூசன் சென்றேன், அப்போது அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இது குறித்து நான் எனது தாயாரிடம் கூறினேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம் புகார் அளித்தோம்.
ஆனால்நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்” என கூறினார்,