தேசிய கீதம் அவமதிப்பு குறித்து - மம்தா பானர்ஜிக்கும் சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!!

மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு மும்பைக்கு வந்த போது தேசிய கீதத்தை அவமதித்ததாக பாஜக நிர்வாகி விவேகானந்த் குப்தா பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேசிய கீதம் அவமதிப்பு குறித்து - மம்தா பானர்ஜிக்கும் சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!!

தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றமானது சம்மன் அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்டுள்ள சம்மனில்  அவரை மார்ச் 2 ஆம் தேதியன்று நேரில் ஆஜராகும் படி கூறப்பட்டுள்ளது. 

மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு மும்பைக்கு வந்தபோது தேசிய கீதத்தை அவமதித்ததாக பாஜக நிர்வாகி விவேகானந்த் குப்தா, பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்த மம்தா பானர்ஜி மீது வழக்கு  பதிவு செய்ய  உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார். தேசிய கீதம் இசைக்கப்படும் போதோ அல்லது பாடப்படும் போதோ பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மம்தா பானர்ஜி மீறியதாகவும்  குப்தா தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மம்தா முதல்வராக இருந்தாலும், அவருக்கு எதிராக வழக்கு தொடர எந்த தடையும் இல்லை, ஏனெனில் அவர் தனது அதிகாரப்பூர்வ கடமையை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. டிவிடியில் உள்ள வீடியோ கிளிப் மற்றும் யூடியூப் லிங்கில் உள்ள வீடியோ கிளிப்புகளை ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர் தேசிய கீதத்தைப் பாடிவிட்டு திடீரென மேடையை விட்டு வெளியேறியது தெரிகிறது என நீதிமன்றம் தரப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.