வண்ணங்களின் திருவிழாவாம்..நடனத்தின் உற்சாகமாம்..அதான் ஹோலியாம்!

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வடமாநிலங்களில் களைகட்டியுள்ளது. 

வண்ணங்களின் திருவிழாவாம்..நடனத்தின் உற்சாகமாம்..அதான் ஹோலியாம்!

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வடமாநிலங்களில் களை கட்டியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவியும், சாயங்களை பூசியும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 

குஜராத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வண்ணப்பொடிகளை தூவியும், கூட்டமாக நடனமாடியும், ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தால், எங்கும் பொதுமக்கள் வண்ணப் பொடிகள் பூசப்பட்ட முகங்களுடன் சுற்றித் திரிந்தனர். 

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி பொதுமக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினர். ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியில் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் செருப்புகளை வீசி எறிந்தனர்.