குர்ரானை அவமதித்ததாக கூறி - நபர் ஒருவரை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம்!

குர்ரானை அவமதித்ததாக கூறி - நபர் ஒருவரை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம்!

பாகிஸ்தானில், குர் - ஹானை அவமதித்ததாக கூறி ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கானோவல் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் தேரா கிராமத்தில், நடுத்தர வயது நபர் ஒருவர் புனித குர்ரானின் சில பக்கங்களை கிழித்து எறிந்ததாக வதந்தி பரவியுள்ளது.

இதையடுத்து ஒன்று திரண்ட கிராம மக்கள், அந்த  நபரை மரத்தில் கட்டி தொங்க விட்டு, கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். தான் அப்படிச் செய்யவில்லை என்று அந்த நபர் கதறியதை யாரும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை  என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.