கைவிடப்பட்ட ராக்கெட் மார்ச் மாதம் நிலவில் மோதுவதாக தகவல்...ராக்கெட் மோதினால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தெரிவிப்பு!!

தனியார் நிறுவனத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ராக்கெட் தற்போது மார்ச் மாதம் நிலவில் செலுத்த உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

கைவிடப்பட்ட ராக்கெட் மார்ச் மாதம் நிலவில் மோதுவதாக தகவல்...ராக்கெட் மோதினால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தெரிவிப்பு!!

அமெரிக்காவில் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டின் போது காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஃபேல்கான் 9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவியது. செயற்க்கை கோளானது சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்திய பின்பு சில தொழில்நுட்ப காரணங்களால் அதனை மீண்டும் பூமிக்கு திருப்புவதில் கடினம் ஏற்பட்டு ராக்கெட்டை விண்வெளியிலேயே விடுவதாக நிறுவனம் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து கட்டுபாட்டை இழந்த ராக்கெட் பூமியையும் நிலவையும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ராக்கெட்டின் பூஸ்டர் என அழைக்கப்படும் முன்பாகம் நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இதனை வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதியன்று ராக்கெட் நிலவில் மோத இருக்கிறது. சுமார் 4 டன் எடை கொண்ட பூஸ்டர் நிலவினை நோக்கி மணிக்கு 9290 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டு இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட்டின் உதிரி பாகங்கள் நிலவில் விழுவது புதிது அல்ல என கூறிய நாசா  ஃபேல்கான் 9 ராக்கெட் மோதுவதால் பெரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ராக்கெட் மோதலால் ஏற்படும் தாக்கத்தின் எதிரொலியாக நிலவின் மேற்பரப்பில் 30 முதல் 60 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்படும் என்று விண்வெளி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.