
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு, கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகளை மேலும் துரிதப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.