உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்...உச்சநீதிமன்றம்.!!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது. 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்...உச்சநீதிமன்றம்.!!

உக்ரைனில் போருக்கு மத்தியில் உணவு, தண்ணீர், உறைவிடம் இன்றி சிக்கி தவிக்கும இந்தியர்களை மீட்க்க்கோரி பாத்திமா என்ன நபர் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்கள்  உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதார்கள் சார்பில் உக்ரேனிய எல்லைப்பகுதியில் ருமேனியாவில் தான் பலர் 6 நாட்களாக சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பெண்கள் எனவே இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் : 

சம்மந்தப்பட்ட நபர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுவிட்டது, அவர்கள் தற்போது ருமேனியாவில் உள்ளனர்.  இன்று இரவு தாயகம் அழைத்து வரப்படவுள்ளனர்  என கூறினார். மேலும் உக்ரைனின் ஒடேசா நகரில் சிக்கியிருந்த மாணவர்கள் அனைவரும் ருமேனியா நாட்டிற்கு வந்து விட்டதாகவும் அவர்கள் அனைவரும் சிறப்பு விமானங்கள் மூலமாக நாட்டிற்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

அப்போது பேசிய தலைமை நீதிபதி, உக்ரைனில் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்ற விவரம் உள்ளதா ? என வினவினார். அதற்கு மத்திய அரசு தரப்பு உக்ரைனில் இருந்து சுமார் 14 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாகவும் மீதம் உள்ள சுமார் 7000 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி, மத்திய அரசை குறித்து எதுவும் பேசவில்லை என்றும் ஆனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும், அதேவேளையில் அங்கு தற்போது சிக்கியுள்ள மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணயை மார்ச் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.