சிங்கள மக்களிடம் இருந்து தப்பிய ராஜபக்சே குடும்பத்தினர்.. இலங்கை கடற்படை முகாமில் தஞ்சம்.. வெடித்தது மக்கள் போராட்டம்!!

சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கும்  மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

சிங்கள மக்களிடம் இருந்து தப்பிய ராஜபக்சே குடும்பத்தினர்.. இலங்கை கடற்படை முகாமில் தஞ்சம்.. வெடித்தது மக்கள் போராட்டம்!!

தஞ்சமடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதனால் வெகுண்டெழுந்த சிங்களர்கள் ராஜபக்சே, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக உக்கிரப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் தென்னிலங்கை பற்றி எரிகிறது.

 ராஜபக்சேக்களின் குடும்ப கல்லறை, பூர்வீக வீடுகள் தொடங்கி சனத் நிஷாந்தவின் வீடு; திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு  உட்பட ஆட்சியாளர்களின் அத்தனை சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் தென்னிலங்கையில் இனி உயிர்வாழ முடியாது என அஞ்சி கொழும்பில் இருந்து இன்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவரதை தடுக்க விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சமடைந்த தகவல் காட்டு தீயாக பரவியது. இதனையடுத்து திருகோணமலை கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தை கடற்படை முகாமில் இருந்து வெளியேற்றவும் வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.