நாட்டு மக்களுக்காக திருமணத்தை தள்ளி வைத்த நியூசிலாந்து பிரதமர்!

மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்பு தான் திருமணத்தை பற்றி யோசிக்க இயலும் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக திருமணத்தை தள்ளி வைத்த நியூசிலாந்து பிரதமர்!

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையினை நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றுள்ளார். இதுவரை அந்நாட்டில் 15,550 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளானதாக பதிவாகியுள்ளது.மேலும் 52 பேர் மட்டுமே இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1,096 பேர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நணபரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாக சொல்லப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை. 

பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன். இவ்வாறு ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.