ஏர் இந்தியாவை முறைப்படி டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு.!!

ஏர் இந்தியாவை முறைப்படி டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு.!!

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  டெல்லியில்  உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு  நடைபெற்றது. அப்போது  கடனில் மூழ்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கியதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

முன்னதாக  நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, டாடா குழுமம் ஏலத்தில்  வாங்கியது.  

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் உள்பட அனைத்து அதிகாரத்தையும்  டாடா குழுமத்திடம் மத்திய அரசு  இன்று  ஒப்படைத்தது.