பிரதமர், நிதியமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜக கடும் கண்டனம்!!

பிரதமர், நிதியமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜக கடும் கண்டனம்!!

2022-23 மத்திய பட்ஜெட் மற்றும்  பிரதமர், நிதியமைச்சரை தரக்குறைவாக விமர்சித்தற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோல்மால் பட்ஜெட் என விமர்சித்திருந்தார். மேலும் இவை வார்த்தை ஜாலத்தின் ஏமாற்று வித்தையே தவிர வேறில்லை எனவும் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.