#BREAKING தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 10க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!!

#BREAKING தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 10க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!!
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து:

ஜபல்பூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி மருத்துவமனை முழுவதும் பற்றி எரிந்தது. இந்த தீயில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3க்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனை ஊழியர்கள்:

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனை ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு அவசர வழி மட்டுமே இருந்ததால் தப்பிக்க முடியாமல் உயிரிழப்பு:

மருத்துவமனையில் ஒரே ஒரு அவசர வழி மட்டுமே இருந்ததால் தப்பித்து ஓட முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பலம் மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்:

இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com