தெலுங்கானா : தொடர் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ..!

தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா : தொடர் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ..!

தெலுங்கானா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து  ஐதராபாத், நிஜாமாபாத், புல்பாலி, முளுகு, மஞ்சேரியல், பத்ராத்ரி, கோத்தகுடெம், நிர்மல், அடிலாபாத் பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆன்லைன் வாயிலாக ஈடுபட்ட தலைமை செயல் அதிகாரி, மீட்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.