காதல் திருமணம் செய்த அக்கா...தலையை வெட்டி பழி தீர்த்த பயங்கரம்....!!!

காதல் திருமணம் செய்த சகோதரியை, சிறுவன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த அக்கா...தலையை வெட்டி பழி தீர்த்த பயங்கரம்....!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இருவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனைதொடர்ந்து கடந்த ஜீன் மாதம் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர், இருவரும் லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே அவர்கள் இருவரும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் இருவருக்காகவும் அந்தப் பெண் சமையலறையில் டீ போட்டுக் கொண்டு இருக்கும் போது, பின்புறாக சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளான். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அவர் தப்பித்துள்ளார். பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தாய் மகனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.