டாட்டூ வரைய வந்த பெண்களிடம் சில்மிஷம்...தலைமறைவான டாட்டூ கலைஞருக்கு வலைவீச்சு.!!

கேரளா கொச்சியில் டாட்டூ வரைய வந்த இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

டாட்டூ வரைய வந்த பெண்களிடம் சில்மிஷம்...தலைமறைவான டாட்டூ கலைஞருக்கு வலைவீச்சு.!!

டாட்டூ போடுவது என்பது தற்போது இளைய தலைமுறையினர் இடையே பேஷனாக மாறி வருகிறது.  வித விதமான படங்கள், வித விதமான டிசைன்கள் மற்றும் பெயர்கள் என பல்வேறு வகைகளில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.

இதில், ஆண் - பெண் பேதமின்றி டாட்டூ வரைய, அதற்கான கலைஞர்களை தேடி செல்லும் நிலையில், டாட்டூ கலைஞர்கள் என்ற பெயரில் சிலர் பெண்களை குறிவைத்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்து வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் கேரளா கொச்சி பகுதியில் நடந்துள்ளது. கொச்சியை சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞர் தன்னிடம் டாட்டூ போட வரும் இளம்பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுவதாக புகார் எழுந்தது.

டாட்டூ போட வந்த மாடல் அழகியிடமும் இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி அந்த மாடல் அழகி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இது வைரலானதை தொடர்ந்து கொச்சி போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் டாட்டூ கலைஞரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவலநிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் ஆன்லைனில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்திலேயே அடுத்ததடுத்து 4 பெண்கள் புகார் அளித்தனர். புகாரில்பேரில் கொச்சி போலீசார் டாட்டூ கலைஞர் மீது வழக்குபதிவு செய்தனர். தன்னை போலீசார் தேடுவதையறிந்த, டாட்டூ கலைஞர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.