உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று மாதங்கள் கழித்து உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.....!

கர்நாடகாவில் உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்து இறப்பு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர்.
உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர்  மூன்று மாதங்கள் கழித்து உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.....!
Published on
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் மதிகிரி தாலூகாவிற்குட்பட்ட சிக்கமாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராஜப்பா.  கூலி தொழில் செய்து வந்த இவருக்கு இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் செண்ட் ஜான்ஸ் மருத்துவமனை பகுதியில் குடிபோதையில் சுற்றித்திரிந்த நாகராஜப்பா வேறு பகுதிக்கு சென்றநிலையில் அவரை போன்று உருவம் கொண்ட நபரின் உடல் கிடப்பதாக நாகராஜப்பா மகள் நேத்ராவிற்கு தகவல் வந்துள்ளது..

அச்சு அசல் அவரது தந்தையை போன்று இருந்ததால் கோரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்து உடற்கூறாய்விற்கு பிறகு சொந்த ஊரில் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது..

இந்தநிலையில் நேற்று திடீரென பல்வேறு பகுதிகளில் குடிபோதையில் ஆங்காங்கே தங்கி கூலி வேலை செய்து ஊர் திரும்பிய நாகராஜப்பாவை பார்த்து கிராம மக்கள் அச்சத்தில் ஓடி ஒளிந்துள்ளனர்.. அதிர்ச்சிக்குள்ளான நாகராஜப்பா வீட்டிற்கு சென்றபோது வீட்டில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து இருப்பதை கண்டு விவரமறிந்தார்..

இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியான நிலையில், உடல் அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? மூன்று மாதங்களாக நாகராஜப்பா எங்கே போனார் உள்ளிட்ட விசாரணையை வருவாய்த்துறையினர் தொடங்கி உள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com