மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ராக்கெட் ரெடி...

மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் ஆர்ட்டெமிஸ் மிஷன் ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன்  ராக்கெட் ரெடி...

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதற்காக இதுவரை இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஒன்றை நாசா வடிவமைத்து வருகிறது. ஆர்ட்டெமிஸ் மிஷன் என்று பெயரிடப்படுள்ள இந்த ராக்கெட்டின் ஒருங்கிணைப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பவுண்டுகள் எடை கொண்ட இந்த ராக்கெட்,  212 அடி உயரம் கொண்டது எனவும் கூறப்படுகிறது. 4 உந்துசக்தி இயந்திரங்களைக் கொண்டது எனவும், விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை ஒரே நேரத்தில் நிலவுக்கு சுமந்து செல்லக்கூடிய ஆற்றல் பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.