ராஜஸ்தான் : நண்பகல் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55 புள்ளி ஆறு மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் இம்மாதம் நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்றும், தெலுங்கானாவில் வரும் 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் நேற்று முன்தினம் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால்  அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க : மொழியில் சிக்கிய குஷ்பு... தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் சினிமா பிரபலங்கள்...!

இந்நிலையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள், வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.