"தொலைத்த இடத்திலேயே தேடும் ராகுல் காந்தி....!"

"தொலைத்த இடத்திலேயே தேடும் ராகுல் காந்தி....!"


கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகிற 10-ம் தேதி முதல் பிரசாரத்தைத்  தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ம் தேதி  தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னா் தற்போது  ராகுல்காந்தி, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளாா் என தகவல் வெளியாகியுள்ளது. அவா் வருகிற 10-ம் தேதி முதல் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலிருந்து பிரச்சாரத்தைத்  தொடங்கவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் வருகிற  மே மாதம் 10ஆம் தேதி, 224 தொகுதிகளுக்கும்  சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அங்கு ஆளும் பாஜக கட்சியானது, தனது ஆட்சியைத் தக்கவைக்க பல வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியை எதிர்த்து தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராகிவருகிறது. வரும் தேர்தலில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் சுமார் 140 முதல் 150 இடங்களை கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் வருகிற 10-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்பப் பெயர் குறித்துப்  பேசியதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைக்குறிப்பிட்டு அவர் நீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு  பரபரப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில்தான் இந்த முறை தனது முதல் பிரசார கூட்டத்தைத் தொடங்க இருக்கிறார் ராகுல் காந்தி. இந்த செய்தி மிகுந்த  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : 
https://www.malaimurasu.com/If-freedom-of-speech-is-suppressed-democracy-will-not-survive-in-this-country-P-Chidambaram