முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ராகுல் காந்தி

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் மற்றும் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கை பார்த்ததோடு, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.