கர்நாடகாவில் ராகுல் காந்தி..! இன்று எத்தனையாவது நாள்?

கர்நாடகாவில் ராகுல் காந்தி..! இன்று எத்தனையாவது நாள்?

காங்கிரசின் பாரத் ஜோடா பாதயாத்திரையின் 30ம் நாள் பயணத்தை கர்நாடகாவின் மாண்டியாவில் இருந்து ராகுல்காந்தி இன்று தொடங்கினார்.

தேச ஒற்றுமை பயணம்:

தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். தமிழகம், கேரளாவில் தனது ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்த அவர், தற்போது கர்நாடகாவில் நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். 

மேலும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

நடைப்பயணத்தின் நிகழ்வுகள்:

ராகுல் காந்திக்கு, செல்லும் இடங்களில் மக்கள் நல்ல வரவேற்பளித்து வருகின்றனர். அக்.2 ஆம் தேதி கர்நாடக மணிலா மைசூரில் கொட்டும் மழையிலும் உரையாற்றினார் ராகுல் காந்தி. அப்போது, தனது இந்திய ஒற்றுமை பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். அதோடு நேற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியுடன் கர்நாடகாவில் நடைபயணத்தில் கலந்து கொண்டார். 

30 ஆம் நாள் பயணம்:

மாண்டியாவில் இருந்து 30ம் நாள் பயணம் இன்று தொடங்கியுள்ளது. அப்போது ஏராளமானோர் ராகுல்காந்தியுடன் நடந்து சென்று செல்பி எடுத்துக் கொண்டனர்.