இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு...

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு...

இந்தியா, பிரான்சிடம் இருந்து ரபேல் வகை போர் விமானங்களை ஒப்பந்தம் செய்து வாங்குகிறது. 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 விமானங்கள் வாங்கப்படுகிறது. இதுவரை 21 விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது 7-வது முறையாக, 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து நேற்று வந்து சேர்ந்தன.

அவை 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்கள் இடைவிடாமல் பறந்துவந்தபோது அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருளை நிரப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.இவற்றையும் சேர்த்து, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.