காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியின் கார் தடுத்து நிறுத்தம்...

உத்திரபிரதேசத்தில் போலீஸ் காவலில் இறந்த துய்மைபணியாளரின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியின் கார் தடுத்து நிறுத்தம்...

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே  25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தி  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட துப்புரவு தொழிலாளி ஒருவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று துய்மைபணியாளரின் குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் காரை அனுமதி இனறி செல்வதாக கூறி உ.பி.போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் ஆக்ரா செல்லகூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர், நான் எங்கு சென்றாலும் என்னை காவல்துறையினர் தடுக்கின்றனர், நான் அவர்களை சந்திக்க உள்ளேன், இதில் என்ன பிரச்சனை உள்ளது என கூறிய அவர், மக்களுக்கு நடக்கும் அநீதியை கண்டு கொள்ளாமல் சொகுசு விடுதியில் அமர்ந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.