பாஜக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை...!

பாஜக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை...!

பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு நிகழ்வுக்காக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இன்று டெல்லி வந்திருந்தனர். இந்நிலையில் கோவா, ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம், திரிபுரா மாநில முதலமைச்சர்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிக்க : "வீழ்ந்த நேரத்திலும் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்" முதலமைச்சர் பெருமிதம்!

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே. பி.நட்டா ஆகியோரும் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் இக்கூட்டத்தில் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.