உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

அமெரிக்கா டெட்டா நிறுவனம் எடுத்த உலகின் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் பிடித்துள்ளார்.

உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான Morning Consult உலக தலைவர்களில் திறமை வாய்ந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  66% சதவீத ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, 4 முதல் 10வரையிலான இடங்களை, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, 65% ஆதரவை பெற்று 2-வது இடத்திலும், மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 63% ஆதரவை பெற்று 3-வது இடத்திலும் உள்ளார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கர்ட் மோரிசன் 54%, ஜெர்மன் அதிபர் ஆங்கிலோ மேர்க்கெல் 53% சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48%, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 37%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 36% ஆதரவை பெற்றுள்ளனர்.