வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!!

வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுவதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!!

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார், அதில் அவர் வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது எனவும், ஊழல் இருந்திருக்காது எனவும் மற்றும் எமர்ஜென்சி இருந்திருக்காது . காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள்.  

நம் நாட்டு மக்கள் கொரோனா பிரச்சனையை திறம்பட எதிர்கொண்டனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியினை கூட கவனிப்பதில்லை எனவும் ராகுல் காந்தி குறித்து மோடி சாடியுள்ளார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது என்றார்.