
இதுதொடர்பாக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2020-21 காலக்கட்டத்தில் குறிப்பிடத்தகுந்த சில பொருளாதார சீர்த்திருத்தங்களை மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார். சீர்திருத்தங்களுடன் 25 சதவீதம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், 23 மாநிலங்கள் அந்த தொகையை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 2 லட்சத்து 14ஆயிரம் கோடி கடன் தொகையுடன் சேர்த்து சீர்திருத்தத்தை அமல்படுத்திய மாநிலங்கள், கூடுதலாக ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாயை கடன் பெறும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக கூறினார். இதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயரும் சூழல் உருவாகியிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.