பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி எம்.பிக்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி!!

பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி எம்.பிக்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி!!

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின், பிரதமர் மோடி எதிர்கட்சி எம்.பிக்களுடன் உற்சாகமாக கலந்துரையாடியுள்ளார்.

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கூட்டத்திற்கு பின், எதிர்க்கட்சி எம்பி.க்கள் இருக்கும் பகுதிக்கு திடீரென சென்று கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதீப் பண்டோபாத்யாய், சுகதா ராய், கேரள காங்கிரஸ் எம்.பி கொடிகுன்னில் சுரேஷ், மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோருடன் சிரித்த முகத்துடன் கலந்துரையாடினார். மேலும், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும்,  திமுக எம்.பியுமான ஆ.ராசாவிடம் கை குலுக்கியும் வாழ்த்தியுள்ளார்.