ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை ஆதரிக்குமாறு - பெற்றோர்களுக்கு போப் ஆண்டவர் கோரிக்கை!!

ஒரே பாலினத்தை சார்ந்த திருமணத்தை கிருஸ்தவ திருச்சபை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு உரிமை வழங்கும் சட்டங்களை ஆதரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை ஆதரிக்குமாறு - பெற்றோர்களுக்கு போப் ஆண்டவர் கோரிக்கை!!

வாடிக்கன் நகர் பகுதியில் பார்வையாளர்கள் சந்திப்பின் போது பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி எடுத்துரைத்தார். பெற்ற பிள்ளை ஓரின சேர்க்கையாக இருப்பின் அவர்களை கண்டிக்காமல் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

தங்கள் குழந்தைகளின் வெவ்வேறு பாலியல் விருப்பங்களை சந்தித்து வரும் பெற்றோர்களுக்கு அவர்களை கையாளுவது என்பது சிக்கலானது எனினும் அதை மறைக்கும் மனப்பான்மையுடன் செயல்பட கூடாது என்கிறார். ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்களது குடும்பத்தினர்  குழந்தைகளாகவும் உடன் பிறந்தவர்களாகவும் கருதி அவர்களை ஏற்றுக் கொண்டு உரிமை படுத்தி நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.